சென்னை அணியின் ஆட்ட விவரம் :
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிக்கான பட்டியலும் வெளிவந்துள்ளது. ஐபிஎல் 2023, ஆரம்ப போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, இறுதிப் போட்டி மே 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த சீசனில் முதல் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் மார்ச் 31 ஆம் தேதி இரவு 7.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
unknown nodeஐபிஎல் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான போட்டிகள் ஏப்ரல் 8 மற்றும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனனான போட்டி ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை அணி மோதும் மற்ற அணிகளின் விவரம் அடங்கிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
unknown node