#IPL2022: சதம் விளாசிய பட்லர்.. வெற்றிபெறுமா கொல்கத்தா?? 218 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய பொறியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய பொறியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 30-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்கள்.

தொடக்கம் முதலே ஜோஸ் பட்லர் சிறப்பாக அடிவர, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த படிக்கல், 24 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், பட்லருடன் இணைந்து சிறப்பாக ஆடிவந்தார். 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த ஜோஸ் பட்லர், சதம் விளாசி, 103 ரன்கள் எடுத்து தந்து விக்கெட்டை இழந்தார். பின்னர் சிம்ரன் ஹெட்மயர் களமிறங்க, இவரின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கொர் 200-ஐ கடந்தது.

இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சில் சுனில் நரேன் தலா 2 விக்கெட்களும், சிவம் மாவி, பேட் கம்மின்ஸ், ரசல் தலா 1 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.

#IPL2022: சதம் விளாசிய பட்லர்.. வெற்றிபெறுமா கொல்கத்தா?? 218 ரன்கள் இலக்கு!