ஆஸ்திரேலிய வீரரான ஜை ரிச்சர்ட்ஸனை 14 கோடிக்கு எடுத்த பஞ்சாப் அணி!

Australian Jhey Richardson has been auctioned for a base price of Rs 1.5 crore. He was picked by the Punjab Kings team for Rs 14 crore.

ஆஸ்திரேலிய வீரரான ஜை ரிச்சர்ட்ஸன் ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 கோடிக்கு எடுத்தது.

2021 ஆம் ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம், இன்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்களை ஒவ்வொருவராக ஏலம் விடப்பட்டு வருகின்றன.

அப்போது, ஆஸ்திரேலிய வீரரான ஜை ரிச்சர்ட்ஸன் ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டது. இவரை அணியில் எடுக்க பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக ஜே ரிச்சர்ட்ஸனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 கோடிக்கு எடுத்தது.