இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் சுரேஷ் ரெய்னா.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு, 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர்.ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா.இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சொந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுகிறார் என்று அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னா விலகுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
unknown node