பெங்களூரு அணியின் பந்துகளை பந்தாடிய ஷ்ரியாஸ் ஐயர்! 187 ரன்கள் குவித்த டெல்லி அணி

The Delhi team scored 187 runs

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரியாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ஷிகார் தவான், ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 18 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் ஷ்ரியாஸ் ஐயரும்,ஷிகார் தவான் கூட்டணியில் அணியின் ரன்னை உயர்த்தினார்கள்.

unknown node

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரியாஸ் ஐயர் 52 ரன்களும், ஷிகார் தவான் 52 ரன்களும் குவித்தனர்.இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் இழக்காமல் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 28* , ஆக்ஸார் படேல் 16* ஆகியோர் களத்தில் நின்றனர்.

பெங்களூரு அணி பந்து வீச்சில் யூசுவெந்திர சஹால் 1 விக்கெட்டையும், உமேஷ் யாதவ்,வாஷிங்டன் சுந்தர், நவடிப் சைனி ஆகியோர் தலா1 விக்கெட்டையும் வீழ்த்தினார். பெங்களூரு அணி 188 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.