ஆன்மீகத் தொண்டில் முருகனின் அடியராக தனது வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் அவதரித்த புண்ணிய பூமி என்று கூறப்படும் காங்கேயநல்லூரில் அருள்பாலித்து வரும் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு லட்ச தீபத்திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகாதீபாராதனையும், லட்ச தீப காட்சியும் நடந்தது.
unknown nodeஇரவு 11.30 மணிக்கு சுவாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவில் வாரியார் சுவாமிகளின் சகோதரர் மகன் புகழனார், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
unknown nodeஇவ்விழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரத்தால் ஜொலித்தது.மேலும் கோவிலின் உள்ளே பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புகழ் சபை மற்றும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் லட்சதீப அறக்கட்டளை ஆனது செய்தது குறிப்பிடத்தக்கது.அரோகரா…