,

இன்றைய (13.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

By

மேஷம்:

இன்று சற்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும் . நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில சோர்வாக இருப்பீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று தலை வலி ஏற்படலாம்.

ரிஷபம்:

இன்று உங்களுடைய பணிகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி வளர்ச்சி ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு வயிற்று வலி ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் நல்ல சிந்தனைகளுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும் .பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் வலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு சில சமயங்களில் அமைதியாக இருப்பது போல் தோன்றும். வேலை செய்யும் இடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். பண வரவு சுமாராக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்று உங்களுடைய கடின முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் இறைவனை பிரார்த்தனை செய்வதன் மூலம் அமைதியாக இருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்டபடி உங்களது பணியை முடிக்க முடியாது. பண வரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டிய நாள். வேலை செய்யும் இடத்தில் சில விரும்பத்தக்கால் தருணங்கள் நடைபெறும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தடைகள் ஏற்பட்டாலும், அதனை உடைப்பீர்கள். பணவரவு குறைந்து காணப்படும்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்:

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றங்கள் காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் முன்னிலையில் இருப்பீர்கள். பணவரவு எதிர்பாராத விதமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மீனம் :

இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணபடுவீர்கள்.  வேலை செய்யும் இடத்தில் பணி வளர்ச்சி சமூகமாக இருக்காது. நிதி வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன், இன்று காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று முதுகு வலி ஏற்படும்.

Dinasuvadu Media @2023