இன்றைய(08.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

இன்றைய(08.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

பஞ்சாங்கம்

இன்று (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், மாசி 25-ம் தேதி நல்ல நேரம்காலை7.30 – 8.30மாலை3.00 – 4.00ராகு காலம் 4.30-6.00எம கண்டம்12.00 – 1.30குளிகை3.00 – 4.30திதிசதுர்த்தசிநட்சத்திரம்மகம்சந்திராஷ்டமம்உத்திராடம்யோகம்:சித்த யோகம்சூலம்:மேற்குபரிகாரம்:வெல்லம்விசேஷம்:மாசிமகம்,ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,காரமடை அரங்கநாத ரதோற்சவம்

இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்:பாதை புலப்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த வாக்குவாத பிரச்சணைகள் மறையும்.

ரிஷபம்:விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர். தொல்லை தந்த எதிரிகள் இப்போது தோள் கொடுத்து உதவுவர். அன்பால் எதையும் வென்று விடுவீர்கள்.

மிதுனம்:எண்ணியவை அவ்வாறே நடைபெறும் நாள். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

கடகம்:குடும்ப பொறுப்புகள் சற்று கூடும் நாள். ஆலயத்தை நோக்கி அடி யெடுத்து வைப்பீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்கள் இன்று முழுவீச்சில் துரிதமாக நடைபெறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

சிம்மம்:நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள். வரவு மனத்திருப்தி தரும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.பாக்கிகள் வசூலாகும்,அரோக்கியத்தில் அக்கறை தேவை.

கன்னி:நட்பு மூலம் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். தொல்லை கொடுத்து வந்த  நோய் அகலும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்து வில்லங்கங்கள் அகலும்.

துலாம்:கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.  ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம்:மாலைநேரத்தில் குடும்பத்துடன் குதூகலப் பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த பகை மாறும்.

தனுசு:எதிரிகள்  உதிரியாகி விலகி செல்லும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் பொருளாதார நிலையை உயர்த்தும்.

மகரம்:வனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்பு ணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர் கள் கூட பகைமை பாராட்டலாம்.

கும்பம்:நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினைகள் எல்லாம் இன்று நல்ல முடிவிற்கு வரும் . இடமாற்றம், ஊர்மாற்றம் எல்லாம் எதிர்பார்த்தபடியே அமையும்.

மீனம்:தடைகள் அகன்று செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் மாற்றுக் கருத்துடையோர்களின் மனம் மாறும். தொழில் போட்டிகள் அகலும்.