இன்று (ஏப்ரல் 20-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாளில் உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். சுபகாரியம் கைகூடும் சூழ்நிலை உருவாகும் நாள் ஆகும்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும் நாள் ஆகும்.
மிதுன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும் நாள் ஆகும்.
கடக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாளில் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது நாள் ஆகும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்றைய நாளில் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும் நாள் ஆகும்.
கன்னி ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்றைய நாளில் உங்களுக்கு பொருளாதார நிலை சற்று இறக்கமாகவே இருக்கும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள் ஆகும்.
துலாம் ராசிக்காரர்கள் :
unknown nodeஇன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும் நாள் ஆகும்.
விருச்சக ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனையே தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பண நெருக்கடிகள் ஓரளவு குறையும் நாள் ஆகும்.
தனுசு ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்று உங்களுக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும் நாள் ஆகும்.
மகர ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாளில் இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும் நாள் ஆகும்.
கும்ப ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும்.
மீன ராசிக்காரர்கள்:
unknown nodeஇன்றைய நாளில் உங்களுக்கு ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை நாள் ஆகும்.