மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சமீபகாலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் சென்னை மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவி எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும், மாணவிக்கு பாலியல் தொல்லை..? காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
unknown node