நேற்று சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நேற்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையில், சென்னையில் நேற்று காலை முதல் நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது.
இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில், நேற்று சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். புளியந்தோப்பில் வடமாநில பெண் ஒருவரும், மயிலாப்பூரில் சிறுவன் ஒருவரும், ஒட்டேரியில் மூதாட்டி ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.