490 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்...!!!

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 தெர்மாகோல் பெட்டிகள் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 தெர்மாகோல் பெட்டிகள் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிக்குள் 490 நட்சத்திர ஆமைகள் இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த நட்சத்திர ஆமைகளை மத்திய வருவாய் துறை மற்றும் சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதனை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.