"சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம்;40-45 கிமீ வேகத்தில் பலத்த காற்று"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

"Approximate depression;strong winds at 40-45 kmph" - Chennai Meteorological Center warning!

சென்னை:காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.