எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட பெண் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட பெண் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.