#Breaking:பிரபல சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம் – பபாசி அறிவிப்பு!

#Breaking: Chennai Book Fair Starts January 6th - Bapasi Announcement!

சென்னை:45-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்,45 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 23 வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதனாத்தில் தொடங்கும் இந்த புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி, வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

மேலும்,விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில்,பல்வேறு புதிய நூல்கள் வெளியிடப்படுவதாகவும்,கலை நிகழ்சிகள் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.