#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில்...14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

#Breaking: In the next 3 hours ... Chance of rain in 14 districts - Chennai Meteorological Department!

சென்னை:தமிழகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னையை தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கடலூர்,மயிலாடுதுறை, நாகை,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருச்சி,புதுக்கோட்டை,திருவாரூர், தஞ்சை,சிவகங்கை,ராமநாதபுரம்,அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.