#BREAKING: கட்டப் பஞ்சாயத்தை தடுக்க சிறப்பு படை – காவல்துறை உத்தரவு!

Special Forces to monitor construction and illegal activities in the suburbs of Chennai.

சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவரை கண்காணிக்க சிறப்பு படை அமைப்பு.

சென்னை புறநகர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்தது காவல்துறை. தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்கவும் சிறப்பு படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.