நிவர் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு

The Central team that came to Tamil Nadu to study the effects of Nivar storm and rain flood has started the study work in Chennai Velachery.

நிவர் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு, சென்னை வேளச்சேரியில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.நேற்று தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது.தமிழகத்தில் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளது மத்திய குழு.இந்நிலையில் இன்று சென்னையில் வேளச்சேரி உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. 2 குழுக்களாக பிரிந்து வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.