சென்னை : 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை – மருத்துவத்துறை செயலாளர்!

In Chennai, 65% of people do not wear a helmet at all, said Medical Secretary Radhakrishnan.

சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தினசரி 600 பேருக்கு கொரோனா தொற்று என்பதை இனி 0 ஆக மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை எனவும், தமிழகத்தில் இதுவரை கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக 110 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.