#BREAKING: பிரிட்டனிலிருந்து சென்னை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா..!

Another person who came to Chennai from Britain was confirmed to have corona infection.

பிரிட்டனிலிருந்து சென்னை வந்த மேலும் ஒருவருக்குகொரோனா தொற்று உறுதியானது.

பிரிட்டனிலிருந்து சென்னைக்கு வந்த சிறுமிக்கு  ஏற்கனவே கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னை விமான நிலையம் வந்த 2 குடும்பங்களை சார்ந்த 8 பேரில் ஒரு சிறுமி மற்றும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதித்த இருவர் உட்பட 8 பேரும் கிண்டி கிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதியான இருவரின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.