இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில், இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 1,755 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 2 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததால் , உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட 72 பேரில் சென்னையில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.
unknown nodeதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. இன்று தமிழகத்தில் 114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.