கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நிலையை ஆய்வு செய்து அதன் பின்பு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node