கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. அதில், முதல் முறையாக நேற்று அம்பத்தூரில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவி வருவதால் 1,596 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 18 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 635 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு, 358 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சென்னை மாநகராட்சி 15 மண்டல வாரியாக பிரித்து பட்டியல் வெளியிட்டு உள்ளது.
unknown nodeஅந்த பட்டியலில், ராயபுரம் முதல் இடத்தில் உள்ளது. ராயபுரத்தில் 116 பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, திரு.வி.க. நகர் 42, தேனாம்பேட்டை 42, தண்டையார்பேட்டை 46, கோடம்பாக்கம் 35, அண்ணா நகர் 27 பேர் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், மணலில் மட்டும் யாரும் பாதிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.