நிவர் புயல் ! புகார்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம் – சென்னை மாநகராட்சி

The Chennai Corporation has announced emergency numbers to report complaints about the dangers posed by Nivar storm.

நிவர் புயலால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க,  அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்தது.தற்போது நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது.

இந்நிலையில்புயலால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க,அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளவும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புயல் கால உதவி எண்கள்:

044 2538 4530

044 2538 4540

1913 (24*7)