சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானம், இயந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு 167 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால், உடனடியாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.இயந்திரத்தின் கோளாறு முன்பாகவே கண்டறியப்பட்டதால் 167 பயணிகள் உயிர்தப்பினர்.