வெள்ள பாதிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு...!

Chief Minister MK Stalin visited the flood-affected Manali Puthunagar area and inspected it.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மணலி புதுநகர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.

தற்போதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் மணலி புது நகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மணலி புதுநகர் பகுதி மக்களையும் நேரில் சென்று சந்தித்துள்ளார்.