சென்னையில் பெய்து வரும் கனமழை.!கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம்.!

The railway track near the pencil factory in Chennai has suddenly come down due to heavy rains. Authorities are working hard to rectify it .

சென்னையில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளமானது திடீரென கீழே இறங்கியுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 180கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 190 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 250கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும், அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும் இந்த நிவர் புயல் காரணமாக சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பென்சில் ஃபேக்டரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளமானது திடீரென கீழே இறங்கியுள்ளது . அதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து , பாதிப்பை சரி செய்வதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.