சென்னையில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

The Chennai Meteorological Department has forecast heavy rains in Chennai and heavy rains in Chengalpattu.

சென்னையில் கனமழையும், செங்கல்பட்டில் மிக கனமழையும் நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் சென்னையில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வருகிற 10ம் தேதி டெல்டா மாவட்டங்களான கடலூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 11ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.