நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ! மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு

In connection with Niver Cyclone, Metro Train Services will start by today (26.11.2020) 12.00 pm -Chennai Metro Rail

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகிய நிவர் புயல் காரணமாக நேற்று முழுவதும் முழு தமிழகமே பதட்டத்தில் காணப்பட்டது.புயலானது தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது.எனவே பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.

ஆகவே நேற்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சூழலை பொறுத்து இன்று ரயில் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில்நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று நிறுத்தப்பட்டமெட்ரோரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.விடுமுறை கால ஆட்டவணையின்படி ரயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.