என்ஐஏ சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் சென்னை, நெல்லை, இராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை

தமிழகத்தில் சென்னை, நெல்லை, இராமநாதபுரம், மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய புகாரில், என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், சென்னை பாரிமுனையில், தவுபிக் முகமதுவின் வீட்டில் இருந்து வாங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.