படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர் என அமைச்சர் அறிவிப்பு.
சென்னை அருகே படப்பையில் மார்ச் 5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். படப்பையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 501 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் விதமாக படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர்.