200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் – சென்னை மாநகராட்சி ஆணையர்!

Chennai Municipal Commissioner Sukandeep Singh Bedi has said that medical camps will be conducted in all the 200 wards.

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆட்சியர் சுகன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.