அனைத்து சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா தடுக்கமே 3 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்குகாரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், மே 4 -ம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.அதில், அனைத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும். மணிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்யவேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
unknown nodeமேலும், பேருந்தில் ஏறும் பயணிகள் மாஸ்க் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்ககூடாது, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் , நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.