விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு;தமிழகம் முழுவதும் 1614 பேர் மீது வழக்குப்பதிவு!

Police have registered a case against 1614 people across Tamil Nadu for exploding firecrackers beyond the time allowed yesterday.

தமிழகம் முழுவதும் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 1614 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

மேலும்,அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,நவம்பர் 4 ஆம் தேதியான நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அப்போது,அரசின் விதிகளை மீறி,அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து நேற்று இரவு வரை பட்டாசு வெடித்ததாக கூறி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1614 பேர் மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் ராயப்பேட்டை,கீழ்பாக்கம்,அயனாவரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 758 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.