தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு – சென்னை மாநகராட்சி ஆணையர்

The number of daily infections in Chennai has come down, said Corporation Commissioner Kagandeep Singh Bedi.

சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்.

சென்னை ரிப்பன் மாளிகைகள் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். இல்லையெனில் தொற்று எளிதாக பரவும், சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா விவரங்களை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தாங்களாகவே முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் சோதனை எடுக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கபடுகிறது எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் சரியான முகவரி, செல்போன் எண் அளித்தால் அவர்களுக்கு நல்லது. அப்போது தான் தினசரி நலம் விசாரிப்பு மற்றும் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.