மழை வெள்ளம் பாதிப்பு : மூன்றாவது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு!

The Chief Minister has personally visited the rain-affected Kolathur area and inspected it.

மழை வெள்ளம் பாதித்த கொளத்தூர் பகுதியில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர், இன்று மூன்றாவது நாளாக சென்னை கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார்.