சென்னையில் ரூ.6.88 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்....!!!

சென்னையில் ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதில்  முக்கிய நபர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதில்  முக்கிய நபர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சூளைமேட்டில் வெளிநாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.6.88 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், சொகுசுகார், 21 லட்சம் ரொக்கப்பணம் பிடிபட்டது. கும்பலின் தலைவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சென்னை சூளைமேட்டில்  கடத்தலில் ஈடுபடும் முக்கிய புள்ளியின் வீட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து ரூ.6.88 கோடி மதிப்புள்ள 20.6 கிலோ தங்கக்கட்டிகள், கடத்தலுக்கு பயன்படுத்திய பி.எம்.டபில்யூ கார் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.

இதனையடுத்து, போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.