மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாமியார் சதுர்வேதியை குற்றவாளியாக அறிவித்து இருந்தார்கள். இவர்மீது பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேலும் இது தொடர்பான வழக்குகள் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றுவதாலும்,செல்போன் உபயோகிக்காத காரணத்தாலும் இவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது அவருக்கு நெருக்கமாக உள்ள ஆதரவாளர்கள், நண்பர்களை பிடித்தால் அவர் பதுங்கி இருக்கும் இடம் தெரியவரும் என கூறுகிறார்கள். மேலும் இவர் உத்திரபிரதேசம் வாரணாசியில் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.