இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!

The Chennai Corporation has announced that the first ban will be imposed on the public from today on all beaches, including the Marina.

சென்னை:மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக,இன்று முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குறிப்பாக,மறு உத்தரவு வரும் வரை கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

எனினும்,நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது எனவும்,பிரத்தியேக நடைபாதையில் செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.