#Breaking:கடமையை செய்ய தவறினால் ஊதியம் பிடிப்பு? – உயர்நீதிமன்றம் அதிரடி!

The Chennai High Court has questioned why the salaries of officers who fail to do their duty should not be withheld.

சென்னை:கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கடமையை செய்ய தவறிய அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.அதே சமயம்,கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கோவில் செயல் அதிகாரிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன எனவும்,கடமையை செய்ய தவறிய செயல் அலுவலர்,அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்களின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனையடுத்து,அடுத்த இரண்டு வாரங்களில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.