#Alert:தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

The Chennai Meteorological Department has forecast moderate rains in Delta districts in Tamil Nadu today.

சென்னை:தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள்,சிவகங்கை,புதுக்கோட்டை, ராமநாதபுரம்,காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.