ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நீதிபதிகள் அனுமதி அளிக்கவில்லை என வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது உடனிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். வைகோ அவர்கள் கூறுகையில், நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அதிமுக அரசும், ஸ்டெர்லைட் அதிகாரிகளும் இணைந்து கூட்டு சாதியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.