#Breaking:சென்னை:வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

The Meteorological Department has forecast heavy rains in the northern coastal districts of Tamil Nadu on October 10 and 11.

வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வருகின்ற 10,11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக,இன்று தமிழகத்தில் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தென்மேற்கு வங்க கடல் ,வட தமிழக கடலோர பகுதிகளில் 40 கிமீ முதல் 60 கிமீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால்,தமிழக,ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.