வேட்புமனு தாக்கல் செய்ய கோமாளி வேடம் அணிந்து வந்த வேட்பாளர்

This news gives information about Candidate wearing clown to file nomination

திருப்பரங்குன்றம், சூலூர் , ஓட்டப்பிடாரம், அரவங்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அனைத்து கட்சினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற  சுயேட்சை வேட்பாளர் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் என்று  வேட்புமனு தாக்கல் செய்தார்.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நூர் முகமது கோமாளி வேடம் அணிந்து வந்தார்.அவரை பார்த்த பலர் வியப்புடன் பார்த்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நூர் முகமது,  தான் 30 முறை தேர்தலில் தான் போட்டியிட்டு உள்ளதாகவும், தற்போது 31-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் தெரிவித்தார்.