நள்ளிரவு 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்க கோரி....! வணிகர் சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையர் மனு....!!!

கோவை வணிகர்கள் மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாவட்டத் தலைவர் இருதயராஜா தலைமையில் மாநகர காவல் ஆணையர் சுமித்  சரணிடம் மனு

கோவை வணிகர்கள் மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாவட்டத் தலைவர் இருதயராஜா தலைமையில் மாநகர காவல் ஆணையர் சுமித்  சரணிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில், இரவு நேரங்களில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து அதிக அளவில் மக்கள் வருகின்றனர். இவர்கள் நள்ளிரவில் உணவு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே நள்ளிரவு 12 மணி வரையில் கடைகள் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.