புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம்!புதிய எஸ்.பி. நியமனம்

this news given information about SPPandiarajan released New SB Appointment

பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும்  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை  டிஜிபி ராஜேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றினார்.பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

unknown node

முதலில் பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல்  கோவை எஸ்.பி.பாண்டியராஜன் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டது.அதில் தமிழக அரசு எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக  தமிழக உள்துறை  செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பொள்ளாச்சி பாலியல் கொடுமையில் புகாரளித்த பெண்ணின் விவரத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதிய எஸ்பியாக சுஜித் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பொள்ளாச்சிக்கு புதிய டிஎஸ்பியாக சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஏற்கனவே இருந்த டிஎஸ்பி ஜெயராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் பொள்ளாச்சி கிழக்கு காவல்  ஆய்வாளர் நடேசன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதிய பொள்ளாச்சி கிழக்கு காவல்  ஆய்வாளராக வெங்கட்ராமன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.