இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்...!

From today in Coimbatore, headgear is mandatory for those riding on the back of two-wheelers

Helmet

கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என்றும், விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.