பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் மாணவர் உயிரிழப்பு..!

கோவை ஆலந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை ஆலந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 2 பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர் 3 பள்ளி மாணவர்களை கத்தியால் குத்தினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், மோதலில் காயமடைந்த பிளஸ்-1 மாணவர் நந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் முன்னாள் பள்ளி மாணவர்கள் உட்பட சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.