#Breaking:கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் உத்தரவு..!

The Coimbatore District Collector has announced additional restrictions in the district from tomorrow.

கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை.

அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.மேலும்,உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை அனுமதி.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி.ஆனால்,மார்க்கெட்களில் சில்லறை விற்பனைக்கு தடை.

உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.

கிராஸ்கட் சாலை,100 அடி சாலையில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை கிழமைகளில் இயங்க தடை.

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு.

கேரளாவிலிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.