இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்..!

கடலூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Twoprivatebusaccident

கடலூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 80 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.